SivanTempel-Dortmund.de

German flag

பிரதான தொடுப்புக்கள்

װ மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம் װ
siva-drawing

ஆலயம் பற்றி...

about

இந்து சமயம் ( Hinduism ) இந்தியாவில் தோன்றிய, காலத்தால் மிகவும் தொன்மையான உலகின் முக்கிய சமயங்களில் ஒன்று. ஏறக்குறைய 850 மில்லியன் இந்துக்களைக் கொண்டு உலகின் மூன்றாவது பெரிய சமயமாக இருக்கின்றது [1][2]. பெரும்பாலன இந்துக்கள் இந்தியாவிலேயே வசிக்கின்றார்கள். நேபாளம், இலங்கை, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், சுரினாம், ஃபிஜி தீவுகள், ஐரோப்பா, அமெரிக்கா, கனடா,ஆப்பிரிக்கா மற்றும் பிற பல நாடுகளிலும் இந்துக்கள் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் வசிக்கின்றார்கள்.

பிற சமயங்கள் போலன்றி இந்து சமயத்தை தோற்றுவித்தவர் என்று யாருமில்லை. இதனைக் நெறிப்படுத்த அல்லது கட்டுப்படுத்த என ஒரு மைய அமைப்பு இதற்கு இல்லை. பல்வேறு வகையில் பரவலான நம்பிக்கைகள், சடங்குகள், சமய நூல்கள் என்பவற்றைக் உள்வாங்கி உருவான ஒரு சமயமே இந்து சமயம்.

பிரதம சிவச்சாரியாரின் ஆசியுரை...

சிவஸ்ரீ சாமி
தெய்வேந்திரக்குருக்கள்

கும்பாபிசேக பிரதிஷ்ட குருவும் ஆலாயகுருவுமாகிய
சிவஸ்ரீ சாமி தெய்வேந்திரக்குருக்கள் அவர்களின் ஆசியுரை...

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொற்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதாற் கூப்புவர் தம் கை

ஐரோப்பாவின் பெரிய நாடாம் ஜேமனித்திருநாட்டில் டோட்முண்ட் மாநகரில் கொம்புறூக் எனும் பதியில் அருள்பாலிக்கும் ஸ்ரீ சாந்தநாயகி அம்பாள் சமேத சந்திரமௌளீஸ்வரப் பெருமான் பாலஸ்தாபனம் செய்யப்பட்ட நாளிலிருந்து கும்பாபிசேகம் இனிது நிறைவுபெற்ற நாள்வரை எமக்குள்ளே இருந்து எம்மை இயக்குவித்தான். "எம்மையும் ஆக்கினான் தம்பணி செய்யவே" என்கின்ற வாக்கியமே மிகச் சாலப் பொருத்தம். எத்தனையோ சிரமங்கள், தடைகள் என வந்த போதும் அவற்றையெல்லாம் கடந்து இந்தப் பெரும் சாந்திவிழா நடைபெற்றது ஈசன் அருள் என்றே கூறவேண்டும்.

"அவன் அருளாலே அவன் தாழ்வணங்கி" என்னும் புராணத்திற்கமைய "காரணம் இல்லாமல் காரியம் இல்லை" என்கிற வாக்கியத்திற்கும் அமைய தனக்குரிய காலம் இதுதான் எனக் காத்திருந்து செயற்பட வைத்திருக்கின்றார். இத்தனை சிறப்பாய் ஜேர்மனிதிருநாடடில் நவகுண்டங்கள் அமைத்து பரிபூர்ணமாய் ஸ்ரீ சாந்தநாயகியுடன் சந்திரமௌளீஸ்வரப் பெருமானை வரவழைத்து விகித்திவருடம் உத்தராயணக்ரீஷ்ம்ருது ஆனித்திங்கள் 18ம் நாள் (02.07.2010) கும்பாபிசேகம் நடைபெற்றது. இக்கும்பாபிசேகம் இனிதே நடைபெற பல வகைகளிலும் உதவி புரிந்த நிர்வாகத்தினரினதும் பொதுமக்களினதும் சேவை அளப்பரியது. இவ்வாலயம் மென்மேலும் வளர்ச்சியடைந்து, வளர்ந்துவரும் இளஞ்சந்ததியினர் சைவசமய நெறிகளைக் கடைப்பிடித்து வாழவும் அடியார்கள் அனைவரும் சகலசௌபாக்கியங்களும் பெற்றுப் பெருவாழ்வு வாழவும், எல்லாம் வல்ல இறைவனைவேண்டி நல்லாசிகூறி பணின்போடு வாழ்த்துகிறேன்.

............சைவாகம சாதககுருமணி,சிவாகம கிரியா தத்வநதி சிவஸ்ரீ சாமி தெய்வேந்திரக்குருக்கள்

பரிபாலன சபை...

special

இந்து சமயம் ( Hinduism ) இந்தியாவில் தோன்றிய, காலத்தால் மிகவும் தொன்மையான உலகின் முக்கிய சமயங்களில் ஒன்று. ஏறக்குறைய 850 மில்லியன் இந்துக்களைக் கொண்டு உலகின் மூன்றாவது பெரிய சமயமாக இருக்கின்றது [1][2]. பெரும்பாலன இந்துக்கள் இந்தியாவிலேயே வசிக்கின்றார்கள். இலங்கை, இந்தோனேசியா, மலேசியா,நேபாளம், சிங்கப்பூர், சுரினாம், ஃபிஜி தீவுகள், ஐரோப்பா,அமெரிக்கா, கனடா,ஆப்பிரிக்கா மற்றும் பிற பல நாடுகளிலும் இந்துக்கள் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் வசிக்கின்றார்கள்.

ஆலயம் திறக்கும் நேரம்...

announcement
தினமும் கலை 9:00 மணி முதல் 11:30 மணி வரை.

(பூசை நேரம் 10:00 முதல்)

தினமும் மாலை 17:30 மணி முதல் 19:30 மணி வரை.

(பூசை நேரம் 18:00 முதல் )

கீதாசாரம்...

geethai

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.

எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.

எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.

உன்னுடையதை எதை இழந்தாய்? எதற்காக நீ அழுகிறாய்?

எதை நீ கொண்டு வந்தாய்? அதை நீ இழப்பதற்கு.

எதை நீ படைதிருகிறாய், அது வீணாவதற்கு.

எதை நீ எடுத்து கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.

எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது.

எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது.

மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.

இந்த மற்றம் உலக நியதியாகும்.